கொரோனாவால் வீடு தேடி வரும் மதுபாட்டில்கள்.. டெக்சாஸ் கவர்னர் அதிரடி சலுகை அறிவிப்பு!



Texas governor allowed restaurants to supply alchohol with food

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உணவுடன் சேர்த்து மதுபாட்டில்களையும் ஹோட்டலில் இருந்து மக்களின் வீடுகளுக்கு விற்பனை செய்யலாம் என கவர்னர் கிரேக் அபாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்குள்ள பள்ளிகள், பார்கள், ஜிம் மற்றும் கேளிக்கை விடுதிகளை தற்காலிகமாக மூடுமாறு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Coronovirus

ஹோட்டல்களில் யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என்றும் உணவுகளை வீட்டிற்கு வாங்கி சென்று சாப்பிடலாம் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். இதனால் பலர் ஹோட்டல் உரிமையாளர்கள் ஹோட்டல்களை மூடுதல் அல்லது வேலையாட்களை குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.

இதனால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த கவர்னர் ஹோட்டல்களில் உணவுடன் சேர்த்து மதுபாட்டில்களையும் விற்பனை செய்யலாம் என தற்காலிக சலுகை வழங்கியுள்ளார். இதனால் வீட்டிலே இருப்பவர்களுக்கு மதுவும் எளிதில் கிடைக்கும் ஹோட்டல்களில் வியாபாரமும் தொய்வில்லாமல் நடக்கும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

Coronovirus

கவர்னரின் இந்த முடிவிற்கு ஒரு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் ஹோட்டல் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஒரு ஹோட்டலில், "கவர்னரின் அறிவிப்பால் வேலையிழந்த 40 பேர் இன்று மீண்டும் வேலை செய்ய துவங்கிவிட்டனர்" என பலகையில் எழுதியுள்ளனர்.