திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சினிமா பாணியில் மேம்பாலத்தை உடைத்துக் கொண்டு தலைகுப்புற கீழே விழுந்த பேருந்து.. 21 பேர் பலியான சம்பவம்..!
இத்தாலி வெனிஸ் நகரில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 39 பேரை ஏற்றிக்கொண்டு மார்க்கெரா மாவட்டம் நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தானது மின்சாரம் மற்றும் மீத்தேன் வாயுவில் இயக்கக்கூடிய ஹைபிரிட் பேருந்தாகும்.
இந்நிலையில் இந்தப் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஓட்டுனரால் பேருந்தை சரிவர இயக்க முடியாமல் போனதால் பேருந்தானது அங்கிருந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு தலைக்குப்புற கீழே விழுந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக பேருந்தின் பேட்டரிகள் தீ பற்றி எறிய தொடங்கியதால் பேருந்தில் பயணம் செய்த அநேக பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சிலர் அங்கு இருந்தவர்களின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.