#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பாம்பு... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் பி- 737 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் சரக்குகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் பெரிய பாம்பு ஒன்று சுற்றி திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் ஏதும் நேரவில்லை என்றும் அவர்கள் துபாயில் மிகவும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டார்கள் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடந்த இந்த பாம்பு சம்பவம் குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.