ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பாரிஸில் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்... அதிரடியாக சுட்டுக்கொன்ற போலீசார்...!
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஹரெடு நொர்ட் ரெயில் நிலையம், பிரான்சின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் இன்று காலை 6.45 மணியளவில் வந்த ஒருவர் கூர்மையான கத்தியால் அங்கிருந்த பயணிகள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலை எதிர்பாராததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து அலறியடித்து ஓடினர்.
இதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரை சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடத்தியது யார் மற்றும் தாக்குதலில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.