#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய கூடைப்பந்தாட்ட வீரரின் மரணம்! வெளியானது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் வீடியோ கட்சி
பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோபே பிரையன்ட் அவரது மகள் கயானாவுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கூடைப்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கலிபோர்னியாவில் இருந்து அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் களபாஸஸ் மலைப்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்தது. அந்த ஹெலிகாப்டரில் பிரையன்ட் அவரது மகள் கியானா மற்றும் அவர்களுடன் பயணித்த மற்றவர்களும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனை தொடர்ந்து காலிஃபோர்னியாவை சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள தகவலின்படி கோபே பிரையன்ட் உடன் சேர்த்து 9 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
வெடித்து சிதறிய ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.