மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை..11 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம்..!
இந்தோனேஷியாவில் சுமத்ராவின் மேற்கு மாகாணத்தில் 2891 மீட்டர் உயரத்திற்கு எரிமலையானது வெடித்து சிதறி உள்ளது. இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சாம்பல் துகள்கள் படிந்துள்ளதாகவும் அத்துடன் அங்குள்ள வீதிகள் மற்றும் கார்களை குப்பைகள் மூடி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த எரிமலை வெடிப்பினால் இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 12க்கும் அதிகமானோர் காணாமல் போய் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்தோனேசியாவில் மட்டும் ஏறத்தாழ 127 எரிமலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவை ஒருபுறம் இருக்க இந்தோனேஷியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்க தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் தற்போது எரிமலை வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி கலந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.