மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவு சாப்பிடாமல் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்த பெண் பரிதாப உயிரிழப்பு... தாயின் உருக்கமான வேண்டுகோள்.!
கடந்த ஐந்து ஆண்டுகளாக பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்த ரஷ்யாவை சேர்ந்த ஹனா சம்சநோவா என்ற பெண் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் உலகில் உள்ள பலரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது .
ரஷ்யாவைச் சார்ந்த சோசியல் மீடியா பிரபலம் ஹனா சம்சனோவா. 39 வயதான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்கும் இதே போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தனது உணவு கட்டுப்பாடுகள் பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும் சமூக வலைதளங்களின் மூலமாக பார்வையாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக தனது உணவு முறையில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியதால் இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர் கடந்த ஜூலை 21ஆம் தேதி மரணம் அடைந்திருக்கிறார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவரது தாயார் பட்டினி மற்றும் மனச்சோர்வின் காரணமாக அவரது மகள் இறந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் காய்கறிகளை உட்கொண்டு வந்ததால் அவை உடலுக்கு ஒத்துழைக்காமல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார். தனது மகளின் உடலை ரஷ்யாவிற்கு கொண்டுவர ரஷ்ய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.