வீடியோ: உலகின் விலையுயர்ந்த கார் அறிமுகம்! விலை தெரிந்தால் தலையே சுற்றும்
ஜெர்மனியை சேர்ந்த விலையுயர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான புக்கார்டி இன்று தனது புதிய ரக Buggati La Voiture Noire என்ற காரினை அறிமுகம் செய்துள்ளது. உலகிலே அதிக விலைகொண்ட இந்த காரின் விலை 19 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 1.9 கோடி ரூபாய்.
ஜெர்மனியை சேர்ந்த ஈடோர் புக்கார்ட்டி என்பவரால் 1909 ஆண்டு துவங்கப்பட்டது தான் புக்கார்டி கார் நிறுவனம். அதன் பிறகு அவரது மகன் ஜேன் புக்கார்ட்டி இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இதைப் போன்ற விலையுயர்ந்த காரினை இந்த நிறுவனம் தயாரிப்பது இது முதல்முறை அல்ல. இந்த நிறுவனத்தின் அடிப்படை காரின் விலையே 3 மில்லியன் டாலர் ஆகும். தற்போது மீண்டும் புக்கார்ட்டி நிறுவனம் 19 மில்லியன் டாலர் மதிப்பிலான Bugatti, La Voiture Noire என்ற காரினை உருவாக்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள கார் இந்த Bugatti, La Voiture Noire தான். ஆனால் இந்த விலையுயர்ந்த காரினை வாங்கும் நபரின் பெயரினை வெளியிட அந்நிறுவனம் மறுத்துள்ளது. எப்படியும் உலக பணக்காரர்களில் ஒருவர் தான் இதனை வாங்குவார்.
மேலும் இதே மாடலில் வேறு ஒரு காரினை உருவாக்க போவதில்லை என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இதனை வாங்கும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த காரானது 1500 குதிரை திறனும் 16-சிலிண்டர் இஞ்சினும் கொண்டதாகும்.
Bugatti just unveiled the Bugatti La Voiture Noire, and at $18m it's the most expensive new car in the world pic.twitter.com/bUWt9WfkIm
— Business Insider (@businessinsider) March 7, 2019