திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தவறான மருந்தை கொடுத்து மகள கொன்னுட்டாங்க" - இளம் பெண்ணின் திடீர் மரணம் குறித்து தாயின் குற்றச்சாட்டு.!
இலங்கை நாட்டில் சிகிச்சையின் போது ஏற்றப்பட்ட மருந்தால் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் பரபரப்பாக குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை நாட்டைச் சார்ந்த சாமோதி சந்தீபனி என்ற பெண் அஜீரணக் கோளாறு காரணமாக கொட்டாலிகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் பின்னர் ஜூலை 10ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக பேராதனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் தனது மகள் உயிரிழந்ததாக அவரது தாய் பரபரப்பாக குற்றம் சாட்டிவுள்ளார் .
பேராதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட தனது மகளை அறுவை சிகிச்சை முடிந்து பொது வார்டுக்கு மாற்றிய பின்னர் சேலைன் மருந்து ஏற்றப்பட்டதாகவும் அதனுடன் சேர்ந்து இரண்டு மருந்துகளை ஏற்றிய போது தனது மகள் அசோகர்யமாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அவரது உடல் மற்றும் கை கால்கள் எல்லாம் நீல நிறமாகி அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்த தாய் தெரிவித்து இருக்கிறார். மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையே தனது ஒரே மகளை கொன்று விட்டது என புகார் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.