மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீல் சேரில் இருக்கும் நடக்க முடியாத சகோதரியின் ஆசையை நிறைவேற்ற தம்பி எடுக்கும் ரிஸ்க்..! 40 லட்சம் பேர் பார்த்து சிலிர்த்த வீடியோ காட்சி..!
தனது சகோதரியின் ஆசையை நிறைவேற சிறுவன் ஒருவன் செய்த காரியம் பலரது நெஞ்சங்களை கவர்ந்ததோடு பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
Rex Chapman என்ற டிவிட்டர் பயனர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், நடக்க முடியாத நிலையில், கை கால்கள் செயலிழந்த நிலையில் தனது கையில் கூடை பந்து ஒன்றினை வைத்திருக்கும் சிறுமி ஒருவர் அந்த பந்தை அருகில் இருக்கும் கூடைக்குள் போட முயற்சிக்கிறார்.
ஆனால், தனது சகோதரியால் அது முடியாது என தெரிந்துகொண்ட அந்த சிறுவன், அந்த கூடை பந்தை கீழே இறக்கி, தனது சகோதரியின் அருகில் கொண்டுசென்று அவர் அந்த பந்தை உள்ளே போடும்படி செய்கிறான். சிறுமியும் மிகவும் கஷ்டப்பட்டு அந்த பந்தை உள்ளே போடுகிறார்.
பந்து உள்ளே சென்றதும், அந்த சிறுவன் கைதட்டி தனது சகோதரியை உற்சாகப்டுத்திகிறான். பார்க்கும்போதே சிலிர்ப்படைய செய்யும் இந்த வீடியோ பலரது இதயங்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகிவருகிறது.
This brother helping his sister get buckets is definitely the Twitter content I’m here for...🌎❤️🏀❤️pic.twitter.com/VwlP2mHY8j
— Rex Chapman🏇🏼 (@RexChapman) May 24, 2020