உள்ளாடையுடன் போராட்டத்தில் இறங்கிய அயர்லாந்து பெண்கள்!



thisisnotconsent-in-ireland

அயர்லாந்தில் 17 வயது சிறுமி கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு அவர் அணிந்திருந்த உள்ளாடை தான் காரணம் எனக்கூறி 27வயது குற்றவாளி இளைஞரை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து அயர்லாந்து பெண்கள் தங்கள் உள்ளாடைகளை சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும் பதிவு செய்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ThisisNotConsent

சில நாட்களுக்கு முன்பு அயர்லாந்தில் 17 வயது சிறுமியை 27 வயது இளைஞர் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டு. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அயர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவாளிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் இளம் பெண் அணிந்திருந்த ஆடையை பலாத்காரத்திற்கு காரணம் என வாதிட்டார். மேலும் அந்த இளம் பெண் அணிந்திருந்த உள்ளாடை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பலாத்காரம் இளம்பெண்ணின் ஒப்புதலுடன் தான் நடந்துள்ளது என்று கூறிய நீதிமன்றம் அந்த இளைஞரை விடுதலை செய்துள்ளது.

ThisisNotConsent

பின்னர் இளம்பெண்ணிற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ரூத் கோபினார் அந்த இளம்பெண் அணிந்திருந்த அதே வண்ணத்திலான உள்ளாடையுடன் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் இந்த உள்ளாடை எப்படி பாலியல் பலாத்காரத்திற்கு காரணமாக அமையும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அயர்லாந்து பெண்கள் தங்களது உள்ளாடைகளை வீதிகளில் தொங்கவிட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.