நடுங்க வைக்கும் பயங்கர வீடியோ... பயிற்சியாளரையே கடுமையாக தாக்கிய புலி!!



Tiger attack circus trainer video viral

சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் பயிற்சியாளரை புலி ஒன்று தாக்கும் பயங்கர வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இத்தாலி நாட்டின் லீச்சே மாகாணத்தில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பலவிதமான சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. அதில் இவான் ஓர்ஃபி(31) என்ற நபர் இரண்டு புலிகள் அடைக்கப்பட்ட கூட்டிற்குள் நின்று ஒரு புலியை வழிநடத்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மற்றொரு புலி எதிர்பாராத விதமாக பயிற்சியாளரான இவான் காலை கவ்வியதுடன் அவரையும் கடுமையாக தாக்கியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் புலியிடமிருந்து இவானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை அடுத்து இவானுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளனர். விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவர் எனவும் கூறியுள்ளனர்.