காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பொருளாதார நெருக்கடியை சரி செய்ய; கஞ்சா ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு திட்டம்..!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அன்னிய முதலீட்டை பெற அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆங்கிலேய படையெடுப்புக்கு முன்பு இலங்கையில் இருந்து கஞ்சா ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கஞ்சா ஏற்றுமதி செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கஞ்சா ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது .
இதுகுறித்து இலங்கை மருத்துவ துறை அமைச்சர் சிசிர ஜயக்கொடி கூறுகையில்;-
கஞ்சாவை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகளவு வருமானத்தை ஈட்ட முடியும். கஞ்சா ஏற்றுமதியை சட்டமாக்க புதிய சட்டத்திருத்தங்கள் செய்யப்படும். வரும் 5-ஆம் தேதிக்குள் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும். மேலும் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உள்நாட்டு மருத்துவத்தின் மூலம் இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்ட முடியும்.
இந்நிலையில் கஞ்சா ஏற்றுமதி மீதான தடைகளை நீக்குவது குறித்து நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. உலகளவிலான கஞ்சா சந்தையில் 4 டிரில்லியன் அளவிற்கு கஞ்சாவிற்கான தேவை உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. எனவே அந்த வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளது என்றார்.