2024 முதல் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பானுக்கு பின்னடைவு; இந்தியாவின் நிலை என்ன?.. விபரம் இதோ.!



Top 10 largest economies in 2024 List Out Now 

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர், உலகளவில் ஏற்பட்ட இரண்டு பெரும் போர்கள் பல நாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்து இருக்கிறது. 

வளர்ந்த நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரையில், பொருளாதார ரீதியாக பின்னடைவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. இவற்றை சில நாடுகள் தங்களின் திறமையான செயல்பாடுகள் வாயிலாக தவிர்த்தும், சவாலை எதிர்கொண்டும் வருகிறது.  

இந்நிலையில், இன்று 2024 உலகளாவிய பொருளாதார நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜப்பான் பொருளாதார மந்தநிலையை சந்தித்து நான்காவது இடத்திற்கு சென்றது தெரியவந்துள்ளது. 

முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் ஒரு புள்ளி பின்தங்கிச்சென்றது. இதனால் நான்காவது இடத்தில் இருந்த ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது. 

இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், கனடா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.