3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
#Breaking: ஜப்பான் புகுஷிமா சுனாமி பேரழிவை மிஞ்சியது துருக்கி-சிரியா நிலநடுக்கம்.. மொத்தமாக 19,300-க்கும் மேற்பட்டோர் பலி.!
துருக்கி, சிரியா மற்றும் லெபனான் நாட்டில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட 3 அதிபயங்கர நிலநடுக்கத்தால், அங்கு வானுயர்ந்த கட்டிடங்கள் பலவும் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் தங்களின் சார்பில் மீட்பு படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை துருக்கி, சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
Death toll due to devastating earthquakes in Turkey and Syria rises to more than 19,300; surpasses Japan's Fukushima disaster toll, reports The Associated Press#TurkeySyriaEarthquake pic.twitter.com/ir7s0OJ4EI
— ANI (@ANI) February 9, 2023
அங்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வரை பலியாகலாம் என அமெரிக்கா கணித்து இருந்தது. இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தால் 19,300 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ல் ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமாவில் நடந்த சுனாமி மற்றும் அணுமின்நிலைய கதிரிவீச்சு காரணமாக 18,500 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2011 க்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவை துருக்கி-சிரியா சந்தித்துள்ளது.