கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! கர்ப்பமாக இருக்கும் போதே மீண்டும் கருவுற்ற பெண்!!



UK woman got pregnant while already 3 weeks pregnant

கர்ப்பம் தரித்த சில வாரங்களில் ஒருபெண் மீண்டும் கர்ப்பமான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் பாத் நகரை சேர்ந்தவர் ரெபேக்கா ராபர்ட்ஸ். சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கர்ப்பமான நிலையில் ரெபேக்கா தனது கணவருடன் மீண்டும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ரெபேக்காவுக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

அப்போது ரெபேக்கா மீண்டும் ஒருமுறை கர்ப்பம் தரித்திருப்பதாகவும், தற்போது அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் வளர்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரெபேக்காவுக்கு சமீபத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Mysterious

பிறப்பால் இருவரும் இரட்டையர்கள் ன்றாலும், இவர்கள் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படும் இந்த கருத்தரித்தலுக்கு சூப்பர்ஃபெட்டேஷன் என மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் அஇதுபோன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Mysterious

இந்நிலையில் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் பெற்றோர் வைத்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் நலமாக இருந்தாலும், ஆண் குழந்தையை விட பெண் குழந்தை உருவத்தில் சிறியதாகவும் பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்குக் காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் கவனித்துவருகின்றனர்.