பதற்றமான சூழலில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உக்ரைன்.. மக்கள் பதைபதைப்பு.!



Ukraine Govt Announce Emergency of States

ரஷிய நாட்டின் பாராளுமன்றத்தில், உக்ரைன் பிரிவினைவாதிகளை உபயோகம் செய்துகொள்ள அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக ரஷிய அதிபர் உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் 2 நாடுகளை அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது. 

இதனால் உக்ரைனுக்கு ரஷிய படைகளை அனுப்ப புதினுக்கு உள்நாட்டில் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், உக்ரனினின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு ரஷிய படைகள் நகர்ந்துள்ளன. மேலும், உக்ரைனின் எல்லையில் இருந்து 20 கி.மீ தூரத்தில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளன. 

Ukraine

இதனால் ரஷியா உக்ரைனின் மீது எந்த நேரமும் போர்தொடுத்து செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால், உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனம் 30 நாட்களுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.