மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால்.., - உக்ரைன் அதிபர் பரபரப்பு பேச்சு..!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துச் சென்று 23 நாட்களை கடந்தும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றி வரும் நிலையில், பல நகரங்களில் பல்முனைத் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் உக்ரேனிய மக்கள் மற்றும் போர் வீரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். உக்ரைன் நாட்டிற்கு மேற்கு ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து பொருளாதார மற்றும் இராணுவ தளவாடங்களை வழங்கி வருவதால், அந்த ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைனும் ரஷ்யப் படைகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யப் படை வீரர்களும் பெருமளவு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ரஷ்யாவுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நேரம் வந்துவிட்டது. ரஷ்யா இனியும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் செயல்பட்டால், அது மீண்டும் எழுவதற்கு பல தலைமுறைகளை செலவழிக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.