மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சைபர் தாக்குதல் நடத்தி, அணு ஆயுத சோதனை நடத்தும் வடகொரியா..!
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி செயல்பட்டு வரும் வடகொரியா, கடந்த மாதத்தில் மட்டும் 7 ஏவுகணை பரிசோதனை செய்து உலக நாடுகளை அதிரவைத்தது. மேலும், அமெரிக்காவால் தீவிர பொருளாதார தடை விதிக்கப்பட்டும், அதற்கு சவால் விடும் வகையில் ஏவுகணை பரிசோதனை நடத்தி இருந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார தடை என வடகொரியா கடுமையான பொருளாதார சரிவை கண்டபோதிலும், மக்கள் பசியால் வாடி கொண்டு இருந்த சூழலிலும், அந்நாட்டு அரசு ஏவுகணை சோதனையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், வடகொரியா பல்வேறு நாடுகளின் நிதி நிறுவனம், க்ரிப்டோ கரன்சி நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த சைபர் தாக்குதலின் மூலமாக கோடிக்கணக்கில் பணத்தை திருடி, அதனை வைத்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டத்தினை செயல்படுத்தி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடத்தில் இருந்து 2020 ஜூன் வரை, வடகொரியா சைபர் தாக்குதல் மூலமாக ரூ.373 கோடி பணம் திருடியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.