திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலக மக்களுக்கு பேராபத்து நெருங்குகிறது.?! ஐநா கொடுத்த அதிர்ச்சி தகவல்.!
உலக மக்களுக்கு கடுமையான ஆபத்துக்கள் வர இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
வரும் காலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்படும் எனவும், அவற்றை எதிர்கொள்ள உலக மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஐ.நா எச்சரித்து இருக்கிறது. அதிலும், அதிகபட்சமாக பகல் நேர வெப்ப நிலையை விட இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலையானது கடந்த காலத்தை விட இயற்கைக்கு மாறாக அதிகமாக இருக்கிறது.
இது போல இரவு நேரம் அதிக வெப்பநிலை இருப்பது மனிதர்களின் உடல் நல ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும். பகலில் நம் உடல் அதிக வெப்பத்துடன் இருக்கும். இரவு நேரங்களில் தான் அந்த உடல் வெப்பம் தணிய ஆரம்பிக்கும். அதற்கு ஏற்ற வகையில் குளிர்ச்சியாக இரவு நேரம் இருக்க வேண்டியது அவசியம்.
ஆனால் இரவு நேரத்தில் அதிக வெப்பநிலை இருக்கும் சூழல் ஏற்பட்டால் உடலுக்கு உறக்கமும், புத்துணர்ச்சியும் கிடைப்பது மிகவும் சவாலாக மாறிவிடும். இதன் மூலம் மனிதர்களுக்கு மாரடைப்பு மற்றும் அசாதாரண மரணம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது.