சீனாவில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்!.. 10 லட்சம் பேர் உயிரிழக்கும் வாய்ப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை..!!



Up to one million people may die due to the uncontrollable corona virus in China

சீனாவில் கட்டுக்கு அடங்காமல் பரவி வரும் கொரோனாவால் பத்து லட்சம் பேர் வரை உயிரிழக்க கூடும் என்று சர்வதேச ஆய்வறிக்கை கூறுகிறது. 

சீனாவில் கடந்த 2019-ஆம் வருடம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. அதன் பிறகு, முககவசம், தடுப்பூசி போன்றவைகளால் படிப்படியாக குறைந்து தற்போது உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பின. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு  ஏற்பட தொடங்கியுள்ளது. 

தீவிர கொரோனா விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த சீனா, கொரோனா இல்லாத சீனா, கொள்கையை கைவிட்ட பிறகு அங்கு கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அமெரிக்கா, கொரியா, ஜப்பான், போன்ற நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. 

தற்போது சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎப்.7 கொரோனா வைரஸ் சுவாசக் குழாயை அதிகம் பாதிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் முறையான தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவில்லை என்றால் சுமார் 10 லட்சம் பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கும் நிலை இருப்பதாக, சர்வதேச ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.