திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பென்டகனில் நுழைந்த கோழி.. சுற்றிவளைத்து பிடித்த அதிகாரிகள்.. அமெரிக்காவில் சுவாரசிய சம்பவம்.!
அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் நகரில், அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகன் உள்ளது. இந்த பென்டகனை சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும். இதனால் அப்பகுதியில் எளிதில் யாரும் அனுமதியில்லாமல் செல்ல இயலாது. இந்த நிலையில், சோர்வுடன் வந்த கோழி ஒன்று, பென்டகனில் நுழைந்துள்ளது.
இதனைக்கண்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கோழியை பிடித்து காவலில் அடைத்து வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் விலங்கின ஆர்வலர் தெரிவிக்கையில், "கோழி பென்டகன் அருகே சுற்றித்திரிந்ததால், அதனை அதிகாரிகள் பிடித்து காவலில் வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
பென்டகன் அதிகாரி தெரிவிக்கையில், "கோழி பென்டகனின் பாதுகாப்பு சோதனை சாவடியில் வைத்து பிடிக்கப்பட்டது. உளவு வேலைக்காக அதனை அனுப்பியிருக்கலாம் என்ற சோதனை நடந்தது. சோதனையில் உளவு வேலை இல்லை என்பது உறுதியானதால், அதனை பண்ணை வைத்துள்ளவரிடம் ஒப்படைத்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.