கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஐ.நா அதிகாரிகளை கடத்தி கொன்ற வழக்கு.. 51 பேருக்கு மரண தண்டனை விதித்த இராணுவ நீதிமன்றம்.!
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி & அமெரிக்கரான மைக்கேல் ஷார்ப், சுவீடன் நாட்டினை சேர்ந்த சைடா கோட்டலான் ஆகியோர் கடந்த 2017 ஆம் வருடம் மாயமாகினர்.
இவர்கள் ஐ.நா சபையின் சார்பில் சிறப்பு அதிகாரியாக காங்கோ வந்திருந்த போது, இருவரும் ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்டு, வயல் வெளியில் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக காங்கோ இராணுவம் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையில் 51 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அந்நாட்டு இராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, இறுதி விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஐ.நா அதிகாரிகளை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 51 பேரை குற்றவாளிகள், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.