மார்பகங்கள் போர் ஆயுதமா? - விமானத்தில் பெண் அனுமதிக்கப்படாத சர்ச்சைக்கு கண்டனம்.!



US Utah Girl Request to Delta Airlines 

 

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தை சேர்ந்த 38 வயது பெண்மணி டிஜெய்னா லிசா, சம்பவத்தன்று சால்ட் லேக் சிட்டியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு விமானத்தில் செல்ல விருந்தார். அச்சமயம், அவர் தளர்வான வகையிலான பிரா அணிந்து பயணம் மேற்கொள்ள முற்பட்டுள்ளார். 

இதனால் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டவர், விமானத்தில் செல்ல குழுவினர் தெரிவித்த ஆட்செபனையால் அதிருப்தியடைந்தார். மேலும், இதுகுறித்து டெல்டா ஏர் லைன் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரிக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தலைமை செயல் அதிகாரி, மார்பகங்கள் என்பவை போர் ஆயுதங்கள் இல்லை. ஆண்கள் டி-சர்ட் அணிந்து தளர்வான உடைகளை பயன்படுத்துகிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை என்றபோது, அனைவர்க்கும் பொருந்தும் என கூறியுள்ளார்.