உக்ரைனின் மீது கெமிக்கல் தாக்குதலில் ரஷியா? - அமெரிக்கா பரபரப்பு எச்சரிக்கை.! 



US Warns to Ukraine about Russia Chemical Attack on Land

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சென்று 13 நாட்களை தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரஷிய படைகளை எதிர்க்க உக்ரைன் இராணுவம் மற்றும் பொதுமக்கள் வீதிகள் தோறும் துப்பாக்கி ஏந்தி காத்திருக்கின்றனர். ரஷியாவும் உக்ரைனின் மீது பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. 

இதனால் உக்ரைன் மக்களில் பெரும்பாலானோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் ரஷியா - உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். ரஷியாவின் மீது பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளன.

America

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பாஸ்கி பேசுகையில், "ரஷியா உக்ரைனில் தனது வேதிப்பொருட்கள் மூலமாக இரசாயன தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.