பசித்தால் இனி சாப்பிட வேண்டாம்: பசியை மறக்க வைக்கும் மாத்திரை போதும்.‌. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!



vibrates pill for stop eating

 

தொழில்நுட்ப ரீதியாக உலகம் பல கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. முந்தைய காலங்களில் கருவிகள் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்ட காலம் சென்று, தற்போது சிறிய அளவிலான வேலைகளை செய்வதற்கு கூட தொழில்நுட்பக் கருவிகள் பேருதவி செய்கின்றன.

அந்த வகையில் மனிதனின் உடல்நலத்தை காப்பதிலிருந்து, அதனை மேம்படுத்துவது வரை தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பயோ எலக்ட்ரிக் ஸ்டிமுலேட்டர் என்ற மாத்திரை போன்ற கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

Latest news

இந்த மாத்திரை நம்மால் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் வயிற்றில் வெற்றிடம் உருவாகி பசி ஏற்படும். அந்த கருவி தானியங்கி முறையில் செயல்பட்டு வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி நமது பசி உணர்வை குறைக்கும். 

டயட் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது வரப்பிரசாதமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஆய்வு முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.