மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் வசதி... ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு...!!
டுவிட்டரில் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் வசதியை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. இதனால் பயனர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதன் பின்னர் டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார் எலான் மஸ்க்.
தற்போது, செல்போன் நம்பர் இல்லாமல் டுவிட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. டுவிட்டர் செயலியில் சோதனை அடிப்படையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, அதனை லாபகரமாக மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.