மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி தகவல்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் மரணம்..!
பரிசோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனைகள் பல்வேறு நாடுகளில் நடந்துவருகிறது. சில தடுப்பூசிகள் இறுதி கட்டத்தில் இருக்கும்நிலையில் தன்னார்வலர்கள் சிலருக்கு மருந்து செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி தற்போது உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பிரேசில் நாட்டில் நடைபெற்ற இந்த சோதனையில் பங்கேற்ற இளம் மருத்துவர் ஒருவர் தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அஸ்ட்ராஸெனகா நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில், "பரிசோதனையில் பங்கேற்ற நபருக்கு உண்மையான தடுப்பூசி போடப்படவில்லை எனவும், பரிசோதனையின் ஒரு பகுதியாக போலி மருந்து மட்டுமே அவருக்கு வழங்கப் பட்டதாகவும் அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது".
எனினும் பிரேசில் நாட்டில் தொடர்ந்து பரிசோதனை நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் 1.7 சதவீதம் குறைந்துள்ளது.