#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எச்சரிக்கை!! பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவரா நீங்கள்.. சுவரில் சிறுநீர் கழித்தால் இந்த வாங்கிக்கோ என்று கழிப்பவர் மீது திருப்பி அடிக்கும் பெயிண்ட்...!
பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீது மீண்டும் திருப்பி அடிக்கும் நவீன வகையான பெயிண்ட் ஒன்று லண்டனில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக லண்டனில் உள்ள சோஹா பகுதியில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து சிறுநீரை சுவரில் அடித்தால் மீண்டும் கழிப்பவர் மீது திருப்பி அடிக்கும் பெயிண்ட் ஒன்றை சோஹாவில் உள்ள முக்கியமான 10 இடங்களில் உள்ள சுவர்களில் அப்பகுதி நகர சபை சார்பாக பூசப்பட்டுள்ளது. எனவே அங்கு சிறுநீர் கழிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.