பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
என்ன கொடுமை இது..! கூகுளில் தன்னைத் தேடிய அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!
வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியதாக அந்நாட்டு உளவுத்துறை அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்து அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வட கொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை இணையம் வழியாக மக்கள் தெரிந்து கொள்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தாத வண்ணம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அநாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூகுளில் அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய தகவல்களை தேடி உள்ளார். இவ்வாறு தன்னைப் பற்றி தகவல்களை உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூகுளில் தேடியதை அறிந்த அதிபர் கிம் ஜாங் உன் அவரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.