கலியுக அரக்கனால் வதைக்கப்பட்ட உலக மக்கள்.. 60 கோடி பேர் வறுமையால் வாடுவார்கள் - அதிர்ச்சி தகவல்.!
உலகளவில் மக்களை வாட்டிவதைத்த கொரோனா நோயின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை பல்வேறு நாடுகளை இன்னும் பின்னிலைக்கு தள்ளிவிட்டது.
இந்த விஷயம் குறித்து உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இன்டர்மிட் ஜில் தெரிவிக்கையில், இந்தியாவில் கொரோனா காரணமாக 2020ம் ஆண்டில் 5.6 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்.
மேலும், உலகளாவிய வறுமை நிலையம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2030ம் ஆண்டிற்குள் வறுமையில் இருப்போரின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. உலக நாடுகள் வறுமைக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.