ஒமிக்ரான் எத்தனை நாடுகளுக்கு பரவியுள்ளது தெரியுமா?.. அதிர்ச்சி தகவலை தந்த உலக சுகாதார அமைப்பு.!



WHO Declare Omicron Variant Spreads 89 Countries

புதிய உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. தென்னாபிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட வைரஸ், பிற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. 

இதனால், உலகளவிலான சர்வதேச பயணிகளுக்கு அந்தந்த நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றது. மேலும், பல கட்டுப்பாடு நடவடிக்கையும் எடுத்து வருகின்றன. 

முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா மற்றும் ஐஸ்லாந்து உட்பட 89 நாடுகளுக்கு பரவியுள்ளன. 

WHO

இந்த தகவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, டெல்டா வகை கொரோனாவை விட ஒன்றரை நாள் முதல் 3 நாட்களில் ஒமிக்ரான் இரண்டு மடங்கு அதிவேகத்துடன் பரவும் என்றும் எச்சரித்து இருக்கிறது. 

முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற மத்திய நிதி ஆயோக் குழு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவர்கள், இந்தியர்கள் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 5 %-க்கு மேல் கொரோனா பாதிப்பு மாவட்ட அளவில் உறுதியானால், அங்கு கட்டுப்பாடுகள் விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.