கொரோனா கோரத்தாண்டவம் ஒமிக்ரானோடு முடிந்துவிட்டது? - WHO உச்சகட்ட எச்சரிக்கை.!
ஒமிக்ரான் வகை வேறுபாட்டுடன் கொரோனா ஒழிந்துவிடும் என நினைப்பது தவறானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் வருடம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது வரை பல்வேறு மாறுபாடுகளை அடைந்து, நாட்டிற்கு ஒரு வீரியத்துடன் பரவி வருகிறது. கொரோனாவில் இருந்து பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை மரபணு மாற்றத்தில் இருந்து மக்கள் விடுபட்டு இருந்த நிலையில், ஒமிக்ரான் வகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், "ஒமிக்ரான் வகை வைரஸ் கொரோனாவின் கடைசி மாறுபாடாக இருக்கும் அல்லது இறுதி நிலையில் இருக்கிறோம் என்று கருதுவது ஆபத்தானது" என எச்சரிக்கை விடுத்துள்ளது.