மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி மனைவியின் பிறந்தநாளை மறந்தால் தண்டனை.. இது புதுசா இருக்கே.!
உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு வகையான பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பசிபிக் பெருங்கடலின் பாலினேசிய பகுதியில் உள்ள தீவு ஒன்றில் விசித்திரமான சட்டம் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த தீவில் மனைவியின் பிறந்தநாளை மறக்கும் கணவன்களுக்கு சில கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதாவது சமோவா தீவில் மனைவிகளின் பிறந்தநாளை மறக்கும் கணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதில் மனைவியின் பிறந்தநாளை மறந்து விட்டால் முதல் முறை எச்சரிக்கப்படுகின்றனர். அதே தவறை இரண்டாவது முறை செய்தால் கணவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த இந்த சட்டத்தை உறுதி செய்ய ஒரு சிறப்பு குழு உள்ளது குறிப்பிடத்தக்கது.