திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மற்ற பெண்களை சைட் அடித்ததால் கணவரின் கண்ணில் ஊசியால் குத்திய மனைவி கைது.!
கணவர் மற்ற பெண்களை சைட் அடித்ததால் மனைவி கணவரின் கண்ணில் ஊசியை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெமினல் என்ற 44 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற கணவர் தனது மனைவியை கவனிக்காமல் எதிரே வந்த மற்ற பெண்களை சைட் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரின் கண்ணில் ஊசியை எடுத்து குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் காயமடைந்த கணவர் காவல்துறைக்கு கால் செய்து தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ஜெமினசை கைது செய்தனர். மேலும் அவரிடம் மேற்கண்ட விசாரணையில் கணவரின் கண்ணில் தான் ஊசியால் குத்தமில்லை என்றும் அவரே தன்னுடைய கண்ணில் ஊசியால் குத்திக்கொண்டு பழிபோடுவதாக கூறியுள்ளார்.