திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ.. 42,000 ஏக்கர் நிலங்கள் தீயில் கருகி சேதம்..!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட தீயானது பலத்த காற்றின் காரணமாக மளமளவென பரவி 42000 ஏக்க நிலங்களை சேதுப்படுத்தி உள்ளது. இந்த தீயானது ஒரே இரவில் மூன்று மடங்கு வேகமாக பரவியதால் அருகாமையில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்நாட்டு அரசானது அங்கு வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தீ பரவியுள்ள பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்
தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.