இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட 24 நிமிடங்களில் உயிருடன் வந்த பெண்மணி: இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!



Women alive after 24 minutes dead in america

அமெரிக்காவைச் சார்ந்த பெண்மணி லாரன் கெனடி. இவர் கடந்த 9 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 9 நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவரின் உயிர் இயற்கையாக பிரிந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், திடீரென 24 நிமிடங்கள் கழித்து எழுந்து பேச தொடங்கி இருக்கிறார். 

அதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் செய்வது அறியாத திகைத்துள்ளனர். மேலும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.