பிரேக்கப் செய்த காதலன்.! கோபத்தின் உச்சிக்கு போன காதலி.. அடுத்து நடந்தை பாருங்க.. வைரல் வீடியோ..



Women set to fire of ex boy friend bike viral video

காதலன் பிரேக்கப் செய்ததால் காதலி தான் பரிசாக வாங்கிக்கொடுத்த பைக்கை கொளுத்திய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தாய்லாந்து நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளம் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் காதலித்துவந்தநிலையில் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு வந்துள்ளது. இந்நிலையில் காதலன் ஒருநாள் அந்த பெண்ணிடம் பிரேக்கப் என கூறிவிட்டார்.

அந்த பெண் எவ்வளவோ முயன்றும் அந்த இளைஞரைச் சமாதானம் செய்ய முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது காதலனுக்கு பரிசாக வாங்கிக்கொடுத்த 23 லட்சரூபாய் பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த பைக் அருகே நின்றுகொண்டிருந்த மற்ற இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.