மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆப்கானிஸ்தானில் குற்றம் செய்த பெண்கள்... வித்தியாசமான தண்டனை வழங்கிய தாலிபன் அரசு... அப்படி என்ன தண்டனை..?
தாலிபன் எனப்படுவோர் ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். அடிப்படைவாதம் தீவிரவாதம் அமைப்பாக கருதப்படும் தாலிபன் பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. இந்த தாலிபன் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகவும் ,நேட்டோ படைகளுக்கு எதிராகவும் போரிட்டது. மிகவும் கொடூரமான அமைப்பாக கருதப்படும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த அமைப்பானது ஆப்கானிஸ்தானில் பழைய முறைப்படி 3 பெண்கள் உட்பட 12 பேரை பொது இடத்தில் வைத்து கசையடி தந்து தண்டித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆப்கானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் தாலிபன்கள். மேலும் 90களில் கடைபிடிக்கப்பட்ட அதே வகையான தண்டனையை மீண்டும் அமல்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் தண்டனையை காண வருமாறு முஜாயீதீன் மூத்த தலைவர் மற்றும் பழங்குடியின தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் 21 முதல் 39 கசையடிகள் கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.