#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பின்லாந்து முதலிடம்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
ஐ.நா.அமைப்பின் இந்த ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழலின்மை போன்ற காரணிகளின் அடிப்படையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் எந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7 முறையாக முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் அமெரிக்கா 23வது இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும் உள்ளன.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல், உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 126 வது இடத்தில் உள்ளது. மேலும், இஸ்ரேல் ஐந்தாவது இடத்திலும், ஆஸ்திரேலியா பத்தாவது இடத்திலும் உள்ளது.