மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா வைரஸ் என்னிடம் இருந்து வேறு யாருக்கும் பரவக் கூடாது..! இளம் பெண் செய்த நெகிழவைக்கும் காரியம்..!
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரையில் சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் முதன் முதலில் பரவிய ஒரு கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வுஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையில் பணியாற்றிவரும் இளம் செவிலியர் ஷான் சியா என்பவர் நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்கவும், மருத்துவ பாதுகாப்பு ஆடைகளை அணிந்துகொள்வதற்கு நேரத்தை மிச்சப்படுத்தவும் தனது தலையை மொட்டையடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றனர். இந்தச் சூழலில் நமது நேரத்தை மிச்சப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும். மேலும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மொட்டையடித்துள்ளேன் என கூறியுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.