மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்களை விட இளம் பெண்களுக்கே எய்ட்ஸ் பாதிப்பு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச அளவில் ஐ.நா சுகாதார அமைப்பு எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இது குறித்த ஆய்வு முடிவுகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், பாலின ரீதியாக ஆண்களை விட பெண்களை இரண்டு மடங்கு அதிகம் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக பருவ வயதுள்ள இளம்பெண்கள் 71% எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒரு வாரத்திற்கு மட்டும் சராசரியாக 1900 பேர் எயிட்ஸ் மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 10 வயது முதல் 19 வயதுடைய இளம் பெண்களும் பாதிக்கப்படுவது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் 2.6 மில்லியன் மக்கள் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக், லத்தின் அமெரிக்கா, கரீபியன், தென் ஆசியா ஆகிய பகுதிகளில் அதிக தொற்றுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.