53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தாத்தா வயது நபருடன் அழகான இளம் பெண்ணிற்கு நடந்த திருமணம்! மோசமாக பேசிய நெட்டிசன்கள்.. இளம்பெண் சொன்ன நச் பதில்!
70 வயது முதியவர் ஒருவரை இளம் பெண் ஒருவர் திருமணம் செய்தநிலையில் நெட்டிசன்கள் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகின்றனர்.
சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 70 வயது முதியவர் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மற்றும் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பலரும் அந்த பெண்ணை கடுமையாக திட்டி வந்தனர்.
இவ்வளவு அழகான பெண் அந்த 70 வயது முதியவரை திருமணம் செய்துகொள்ள பணம்தான் காரணம் எனவும், பணத்திற்க்காக இப்படியா செய்வது என பலரும் அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். இந்த வசைப்பேச்சுகளை கேட்டு ஒருகட்டத்தில் அந்த பெண் இணையத்தில் தான் பதிவிட்ட புகைப்படங்களை எல்லாம் நீக்க தொடங்கினார்.
அப்படி இருந்தும் அந்த தம்பதி மீதான வசைப்பேச்சுகள் நின்றபாடில்லை. இந்நிலையில் அந்த 70 வயது முதியவரை தான் ஏன் திருமணம் செய்துகொண்டேன் என அந்த பெண் தற்போது விளக்கமளித்துள்ளார். எனது கணவரின் வாழ்க்கையில் எல்லாமே தனது மனைவி தான், அதாவது தன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். அவரது உயிரே நானாக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
அவரின் அளவுகடந்த பாசத்தை பார்த்துதான் தான் அவரை திருமணம் செய்துகொண்டதாக அந்த பெண் கூறினாலும், இன்னமும் நெட்டிசன்கள் அதை நம்புவதாக இல்லை. அதேநேரம் இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என பலர் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசிவருகின்றனர்.