பிரா அணியும் பெண்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியது என்னென்ன?..!



Bra Wearing Woman Should Know Tips Tamil

பெண்கள் இன்றளவில் விதவிதமான ஆடைகள் அணிவதில் செலுத்தும் கவனத்தில், பாதி கூட உள்ளாடைகள் தொடர்பான விஷயத்தில் செலுத்துவது இல்லை. பெண்களின் மார்பகத்தை பராமரிக்க உதவும் பிராவினை தேர்வு செய்வதில் குறைந்தளவே விழிப்புணர்வு பெற்றுள்ளனர். 

80 % பெண்கள் தங்களுக்கு பொருத்தமில்லாத பிராவை அணிந்து வருகின்றனர். மேலும், தவறான அளவுள்ள பிராவை அணிவதால் தோள்பட்டை, மார்பு, கழுத்து மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் வலி ஏற்படுகிறது. 

18 plus

பிராவின் அன்டெர்பெட் விழா எலும்பை சுற்றி உறுதியாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தோள்பட்டை ஸ்ட்ராப் மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. அதனை உறுதி செய்ய தோள்களில் அழுத்தம் பதிகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். 

மார்பகங்கள் தாங்குவதில் 80 % ஆதரவு அண்டர்பெடில் இருந்து வர வேண்டும். 20 % ஸ்ட்ராப்பில் இருந்து வர வேண்டும். பிரா ஸ்ட்ராப் இறுக்கமாக இருந்தால் தோள்பட்டை, முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம். 

மார்பகம் பிராவின் இரண்டு பக்கத்திலும் பொருந்தியுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மார்பக கப் இறுக்கமாக இருந்தால், மார்பக தசைகள் பக்கவாட்டில் வெளிப்படலாம். 

18 plus

உட்காரும் நேரத்திலும், நடக்கும் நேரத்திலும், நிற்கும் போதும் சாதாரண நிலையில் நிற்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் தசை, தசை நார்கள் மீது அழுத்தத்தை குறைக்கலாம். 

நாம் உடுத்தும் ஆடைக்கேற்ப பிராவை தேர்வு செய்வது அவசியம். விளையாட்டில் ஈடுபடும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிராவை அணிவது நல்லது. தளர்ந்த மார்பகத்தை உடைய பெண்கள், அதற்கேற்றவாறு பிராவை அணிய வேண்டும். 

எந்த பிராவை பயன்படுத்தினாலும், அது உடல் நலத்திற்கு ஏற்றதாக, மிகவும் இறுக்கமாக இல்லாதவாறு சரியான அளவுள்ள பிராவை அணிவது நல்லது.