96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உடலுறவு மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. தெரிஞ்சுக்கோங்க ஆச்சரியப்பட்டு போவீங்க..!
தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் மனிதனின் மூளை, இதயம், ஹார்மோன், இரத்த ஓட்டம் போன்றவை அந்தரங்க வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகிறது. இவ்வுறுப்புகள் செய்யும் இரசாயன மாற்றமே தாம்பத்திய ஆர்வத்தினை ஊக்குவித்து ஆணுக்கு விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.
இதனால் மேற்கூறிய உறுப்புகளை சீராக வைக்க வேண்டியது அவசியம். இன்றளவில் தாம்பத்திய பிரச்சனையை தீர்க்க வயகரா, SSRI, Penile Implant Surgery போன்றவை வந்துவிட்டாலும், அவை அனைத்தும் செயற்கையானதுதான். இயற்கையான இன்பமே இருவருக்கும் உற்சாகத்தை அள்ளித்தந்து, அந்தரங்க வாழ்க்கையை ஆழப்படுத்தும்.
தாம்பத்திய உறவை மருத்துவ ரீதியாக பார்க்கையில், அதனால் உடல் ரீதியாக தம்பதிக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. கலவி இதயத்தை துடிக்க வைக்கிறது. இரத்த ஓட்டத்தினை சீராக்குகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு இது இணையானது. ஒவ்வொருமுறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, உடலின் 200 கலோரி எரியூட்டப்படுகிறது. இது மைதானத்தில் 30 நிமிடம் ஓடுவதற்கு சமம்.
தம்பதி உச்சநிலையை (Orgasm) அடையும்போது உடலில் Endorphins ஹார்மோன் சுரக்கும். இது மனமகிழ்ச்சி மற்றும் திருப்தியை ஏற்படுத்தும். உடல் வலி, மூட்டுவலி ஏற்படாது. மனசோர்வு, மன அழுத்தம் குறையும். வாழ்நாள் நீட்டிக்கப்படும். பெண்களுக்கு மார்பக கட்டி புற்றுநோயாக மாறாமல் இருக்க உதவி செய்யும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.