96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தினமும் 7 மணிநேரம் கூட உறங்காமல் இருக்கீங்களா?.. "அந்த" விசயத்திற்கு பேராபத்து - ஆய்வாளர்கள் உச்சகட்ட எச்சரிக்கை.!
இளம் இளைஞர்களுக்கு 7 மணிநேர உறக்கம் போதும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் 5 மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் பட்சத்தில் தாம்பத்திய வாழ்க்கையானது வெகுவாக பாதிக்கப்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணம், பிரகாம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் எய்ட் தலைமையிலான குழு உறக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி, தினமும் 7 மணிநேரம் உறங்கும் இளவயது பருவத்தினர் கல்வியில் சிறந்தவராக இருந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக எரிக் தெரிவிக்கையில், "16 வயது கொண்ட நபருக்கு 9 மணிநேர உறக்கம் அவசியம் ஆகிறது என்று நம்பப்படுகிறது. இவர்களுக்கு 7 மணிநேர உறக்கம் போதுமானது. வயது அதிகமாகும் போது உறக்கத்தின் அளவு குறைகிறது.
10 வயதாகும் குழந்தைகள் 9 மணிநேரமும், 12 வயதுள்ள நபர்கள் 8 மணிநேரமும், இளம் வயதுள்ளவர்கள் 7 மணிநேரம் உறங்குவதும் சரியானது. இவர்களில் உறக்கம் அந்தந்த வயதுக்கு ஏற்ப சரியான அளவில் இல்லை என்ற பட்சத்தில் பிற பிரச்சனை ஏற்படும்.
நீண்ட ஆண்டுகளாக 5 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்கும் பட்சத்தில், உடலில் சுரக்கும் டெஸ்டிரோஜனின் அளவு வெகுவாக குறையும். அவர்களின் அன்றாட செயலில் மந்தத்தன்மை ஏற்படும். தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படும். இரவில் சரியாக உறங்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும். அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் நல்ல உறக்கமே நல்லது" என்று பேசினார்.