96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
முதலிரவில் ஏற்படும் சந்தேகங்கள்; விடை காண உள்ளே பாருங்கள்
முதலிரவில் தாம்பத்திய உறவிற்காக முதல்முறையாக இருவரும் நெருங்கும்போது, அனுபவமின்மையினால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்.
முதல் உறவின் போது எல்லா பெண்களுக்குமே ரத்தம் வரவேண்டும் என்று அவசியமில்லை. ரத்தம் வரவில்லை என்றால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவளாக இருப்பாளோ என்ற சந்தேகம் எழத்தேவையில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற காரணங்களினால் கன்னித்தன்மை ஜவ்வு கிழிந்து போக வாய்ப்புள்ளது.
எனவே ரத்தம் வரவில்லை என்றாலும் அதை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை. உடனடியாக குழந்தை பேறு வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியர் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பம் தரித்த பின்னர் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது நல்லது. நம்மை ‘நிரூபித்தாக’ வேண்டும் என்பதற்காக முதல் நாளிலேயே மிகவும் சிரத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பெண்ணுக்கும் அது முதல் ராத்திரி தானே.
பெண்ணுக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அது அவர்களை பரவசப்படுத்தவே செய்யும். முதல்நாள் என்பது அறிமுகமாகவே இருக்கட்டும். மென்மையாகவே அது தொடங்கட்டும். அப்பொழுதுதான் மறுநாட்களிலும், வரும் நாட்களிலும் எதிர்பார்ப்பும் அதிகமாகும், உறவும் போரடிக்காமல் இனிமையாக தொடரும்