நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
மடியில் கொட்டிய டீ.. ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில், பிப்.2020 அன்று இளைஞர் தேநீர் வாங்கினார். அவர் காரில் இருந்தபடி தேநீர் வாங்கியபோது, எதிர்பாராத விதமாக சூடான தேநீர் அவரின் மடியில் ஊற்றியது.
அந்தரங்க பகுதிகளில் சூடு காயம்
இந்த சம்பவத்தில் அவரின் தொடை மற்றும் அந்தரங்க பகுதிகள் காயமடைந்தன. இதற்காக மருத்துவமனையில் அனுமதியான இளைஞர் மைக்கேல் கெல்சியா, இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: மும்பை, காஷ்மீர் தாக்குதலுக்கு மூளை: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை.!
மடியில் சிந்திய டீ - ரூ. 431கோடி இழப்பீடு
— BBC News Tamil (@bbctamil) March 20, 2025
ஒரு நபரின் மடியில் டீ கொட்டிய தருணம் இது. இந்த சம்பவத்தில் டீ கோப்பையை சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறி 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இழப்பீடு தொகை இந்திய மதிப்பில்… pic.twitter.com/3vmRaiEiHb
இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த மனுவை விசாரணை செய்த தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நீதிபதிகள், இளைஞருக்கு 50 மில்லியன் டாலர் (ரூ.431 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளது.
இதையும் படிங்க: ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு; அமெரிக்காவில் உயர்கல்வி வாய்ப்பை இழந்து வெளியேறிய இந்திய மாணவி.!