நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
#Breaking: 2026ல் திமுக ஆட்சி பறிபோவது உறுதி - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஆளும் திமுக - எதிர்க்கட்சி அதிமுக இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது.
இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், அதிமுகவை பாஜக இயக்க முயற்சிக்கிறது, கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என பேசி இருந்தார். இந்த விஷயம் அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மக்கள் பிரச்சனையை பேச அனுமதி மறுப்பு? திமுக அரசு மீது எடப்பாடி குற்றசாட்டு.!
திமுக தான் எதிரி
இந்நிலையில், சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுகவுக்கு திமுக மட்டுமே எதிரி. அரசியல் ரீதியாக திமுக மட்டுமே எங்களுக்கு எதிரி.
அதிமுக விழித்துக்கொண்டுள்ளது. விழித்துக்கொண்டவர்கள் பிழைத்துக்கொண்டனர். திமுக அரசு 2026ல் கட்டாயம் மக்கள் துணையுடன் அகற்றப்படும். மக்கள் விரோத ஆட்சியை மக்கள் கட்டாயம் அகற்றுவார்கள்" என பேசினார்.
முன்னதாக கடந்த 2021ல் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்த பாஜக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட நிலையில், 2024 மக்களவை தேர்தலில் இரண்டு கட்சியும் பிரிந்து தனித்தனியே தேர்தலை எதிர்கொண்டது.
இதையும் படிங்க: #Breaking: தூத்துக்குடி, சாத்தான்குளம் நினைவிருக்கா? - கேள்வி கேட்டதும் வெளியே வந்த அதிமுக..!