35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தாம்பத்தியத்தில் தம்பதிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் என்னென்ன?.!
தம்பதிகளின் தாம்பத்திய ஆசைக்கு நேரமோ, இடமோ தடையில்லை. அவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டுவிடும் பட்சத்தில், மோகம் தூண்டப்பட்டு பிற செயல்பாடுகள் அவர்களால் தீர்மானித்து நடத்தப்படும். ஆனால், புறசூழல், உடல் மற்றும் மனக்குறைபாடு காரணமாக தாம்பத்திய விஷயங்களில் சில தடைகள் ஏற்படலாம். அவற்றை தம்பதிகள் தெரிந்து வைத்திருப்பது அல்லது புரிந்திருப்பது அவசியம் ஆகும்.
தாம்பத்திய உறவுக்கு பெண் துணை தயாராக இல்லாத போது, அவரை தாம்பத்தியத்திற்கு அழைப்பது அல்லது வற்புறுத்துவது அதன் மீதான வெறுப்பை ஏற்படுத்தும். ஆசை ஏற்படாத நிலையில் துணையை மற்றொரு துணை வற்புறுத்துவது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் நல்லதல்ல.
உடல் அசதி, மன அழுத்தம், மாதவிடாய் நாட்கள், உடல்நலமின்மை, தம்பதிகளுக்கு இடையேயான சண்டை, அதிகளவு போதை மற்றும் கடந்த தாம்பத்தியத்தில் கசப்பான அனுபவம், ஒரே நிலையில் தாம்பத்தியம் மேற்கொள்வது போன்றவை தாம்பத்திய ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை ஆகும்.
இதுபோன்ற காரணத்தால் தாம்பத்திய விலக்கத்தை துணை விரும்பினால், அதனை மதித்து செயல்படுவது நல்லது. உடல் நலம் மற்றும் மனநலம் மேம்பட உறவு உதவி செய்யும் என்றாலும், நம்முடன் உற்சாகமாக இருக்கப்போகும் துணையின் நிலை அறிந்து செயல்பட வேண்டும். அதுவே சிறந்த உறவை இருவருக்கும் வழங்கும்.
சிலருக்கு தொட்டாலே உணர்வு வரும், சிலருக்கு பல முயற்சிகள் எடுக்க வேண்டும். அதனை புரிந்து செயல்படுவது தம்பதிகளுக்கு நல்ல தாம்பத்திய இன்பத்தையும், எதிர்கால வாழ்க்கையையும் அமைத்து தரும்.